இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.