ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத்துத் தெரிவிக்கையில், தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும்.தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாக சொல்ல முடியும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்வாறான தீர்மானம் தென்னிலங்கையில் மீண்டுமொரு பிரச்சினையை எழுப்பும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply