சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள்!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஷகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இந்த சுற்றிவளைப்பின் போது தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமுமின்றி இயங்கிவந்த மருத்துவ நிலையமும், அழகுக்கலை நிலையமும், பயற்சி நிலையமும் நடத்தி வந்த நபரிடமிருந்த மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகள் கைப்பற்றப்பட்டன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *