கனடாவில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

கனடாவில் (Canada) ஐ-போன் (iphone) பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6  (iphone 6) மற்றும் ஐ-போன் 7 (iphone 7) ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் நட்டஈடு பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தீர்ப்பானது பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.