மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ். மாவட்டத்தின் (Jaffna District) பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதிக மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றது.