கல்முனையில் கடற்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக மருந்துகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.63 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 5,033 மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருதமுனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply