கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது டக்ளஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியுள்ளதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலைக்கான வேலைத்திட்டங்களை இன்று (05) ஆரம்பித்து வைப்பதற்காக அவர் சென்றிருந்த போதே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply