இலங்கைக்கு நேரே 10 நாட்களுக்கு உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்!

ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை நாளைய தினம் (05) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.