அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ.தான் பிரதமர் நரேந்திரமோடியின் குடும்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை : ‘அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. தான். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.