வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கு சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளம் கனடியர்கள் தங்களது கடின உழைப்பினை வாடகைக்காக செலவிட்டு வருவதாகவும் அவர்களுக்கு நலன்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வாடகைக்கு குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
Leave a Reply