அமெரிக்காவில் ராக்போர்ட், இல்லினாய்ஸ் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு நான்குபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஏனைய நான்குபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply