புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் தனது வரலாற்றில் முதல்முறையாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதற்குக் கட்டுப்பாடு என தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் அடுத்ததாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைக்கப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும் கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய 6.2% இலிருந்து 5% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அனுமதிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
Leave a Reply