முள்ளிவாய்க்கால் முதல் காஸா வரை சர்வதேசத்தின் அலட்சியமும் தோல்வியும்

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித பேரவலம் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய படுகொலைகளை நினைவுபடுத்துகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய படுகொலையை தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசிய  இலங்கை இராணுவம்இ பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை  கொன்று தனது கொலை வெறியை தீர்த்துக்கொண்டது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்திய ரணம் இன்றுவரை ஆறாமல் இருக்கிறது. அதற்கான நீதியும் இன்றுவரை கிடைத்தபாடில்லை. முக்கியமாகஇ பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்இ இராணுவத்தின் வார்த்தைகளை நம்பி சென்ற மக்களை கூட சிங்கள இராணுவம் விட்டுவைக்கவில்லை. அதேபோலஇ இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட புது மாத்தளன் பகுதியில் செயல்பட்ட முதியோர் இல்லங்களின் மீதுகூட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரசின் வார்த்தைகளை நம்பி பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை ஏராளம். இதேபோன்ற ஒரு அவலத்தை தான் இன்று காஸாவில் இஸ்ரேல் அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.
மக்களின் அடிப்படை தேவைகளான உணவுஇ நீர்இ எரிபொருள் போன்றவற்றை கூட காஸா மக்களுக்கு வழங்காமல் இஸ்ரேல் அரசு முற்றிலுமாக தடை செய்திருக்கிறது. காஸாவிலிருந்து வெளியேற வாய்ப்பிருக்கும் எல்லா வழிகளையும் அடைத்திருக்கிறது.அதே போல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் என அடையாளம் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. காஸாவில் இடம்பெறும் கிபிர் தாக்குதல்இ எறிகணைத் தாக்குதல்இ பதுங்குகுழிஇ இடப்பெயர்வுஇ நிவாரணம்இ ஐசிஆர்சிஇ யுனிசெப்இ உலருணவுப் பொருட்கள் சுமந்த வாகனத் தொடரணி அகிய அனைத்து சொற்களும் தமிழர்களுக்கு புதிய விடயமல்ல. கொங்கிரீட்டாலும்இ இரும்புகளாலும் சுற்று சுவர்களை எழுப்பி இருக்கிறது இஸ்ரேல். வாழத்தகுதியற்ற நிலையில் ஒரு திறந்தவெளிச் சிறையைப் போலுள்ள இடத்தில்தான்இ சுமார் 20 லட்சம் மக்கள் பாலஸ்தீன பகுதியான காசாவில் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய நிலப்பரப்பில் அடர்த்தியான மக்கள் தொகையுடன் வாழ்ந்துவரும் காசா நிலப்பகுதிக்குள் தான் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறிருக்கஇ இதுநாள்வரைஇ ராணுவ ரீதியில் அசைக்க முடியாத சக்தியாக தன்னைக் கருதிக் கொண்டிருந்த இஸ்ரேல்இ மேற்குலகுக்கும் அதனை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் தேவைப்படும் உளவு பார்க்கும் பெரும் தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் ஹமாஸ் நடத்தியிருக்கும் இந்த எதிர் தாக்குதல் அந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. இதன்மூலம்இ இஸ்ரேலின் ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் அடைந்திருக்கும் தோல்வி இன்று உலக மக்களிடையே வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இஸ்ரேலின் இருப்பு தனது பிராந்திய ஏகாதிபத்திய நலனிற்கு முக்கியம் என மேற்குலகம் கருதியதனால் தான் இத்தனை ஆண்டுகாலம் இஸ்ரேலை  இங்கிலாந்தும் அமெரிக்காவும் பிற மேற்குலக நாடுகளும் மாற்றி மாற்றி வளர்த்து வந்தன. இந்நிலையில்இ இஸ்ரேல் உள்நாட்டிலேயே அடைந்திருக்கும் ராணுவ தோல்வியின் மூலம் ‘மத்திய கிழக்கு நாடுகளின் மேற்குலக கங்காணி” என்கிற நிலையை அது இழக்க நேரிடும் என்கிற பயத்தில் பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இன்றும் வெளியுலகிற்கு தெரியாத நிலையே இருக்கிறது. மேற்குலக நாடுகள் தங்கள் அரசியல் தேவைக்கேற்ப அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டதே தமிழீழ இனப்படுகொலைக்குச் சாட்சியங்களாக உள்ளது. ஆனால் ஒரு தசாப்தம் கடந்து மிக தீவிரமாக தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் காசாவில் நடைபெறும் அனைத்து கொடூரங்களையும் நாம் காணொளியாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனாலும்இ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான சாட்சியங்கள் பல இருந்தும் சர்வதேச சமூகம் அதனை வைத்துக்கொண்டு எவ்வாறான அரசியல் திருகுதாளத்தை செய்கிறது என்பது தொடர்பில் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்துஇ அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றிஇ ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுதான் இன்று பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து தமிழர்களும் பாலஸ்தீனியர்களும் உலகெங்கும் நிலத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து இனங்களும் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால்இ வல்லரசுகள் நிச்சயமாக அந்த மக்களுடன் நிற்கப்போவதில்லை.அவர்களுடைய குரலை ஒரு சிறுதுளியேனும் செவி சாய்க்கப்போவதில்லை. தங்களுடைய நலன்களுக்காக அவ்வப்போது இந்த இனங்களின் மீது கரிசனைகொள்வதாக காட்டிக்கொண்டாலும் அவர்களுடைய நியாத்துக்காகவோ நீதிக்காகவோ என்றைக்கும் இறங்கிவரப்போவதில்லை. கடந்த 14 வருடங்களாக ஈழத்தமிழர்கள் ஐ.நா…ஐ.நா…என்று குரல் கொடுத்து வந்தார்கள்இ ஆனால்இ இன்று காஸா விவகாரத்தில் ஐ.நா.வும் மனித உரிமைகள் நிறுவனங்களும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை புரிந்துகொண்டால்இ ஈழத்தமிழர்கள் புதிய திசையில் சிந்திக்க வாய்ப்பிருக்கிறது என்பதை கூறிவைக்கின்றோம்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *