தமிழினத்திற்கு எதிரான கட்சி பாஜக என்கிறார் ஸ்டாலின்: ஓரவஞ்சனை அரசாக செயல்படுகிறது

தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பாஜக என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு இன்னும் நாசமாகிவிடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். பாஜக அரசு ஓரவஞ்சனையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தினம் இந்த அறிமுக பிரசாரம் இடம்பெற்றது.

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.