Tag: #slpolice
-
மகிந்த வீட்டில் அடிதடி !
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ரணிலின் பிள்ளைகள் போல் செயற்படுவதாக காஞ்சனவை நகைச்சுவையாக எரந்த கினிகே சாடிய நிலையில் கோபமடைந்த அமைச்சர் அவரை தாக்க முயன்றதாக கட்சி…
-
உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட அறிவித்தல் !
தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
மீண்டும் தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி !
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த…