Tag: #cid
-
விமல் வீரவன்ச விடுதலை!
முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
-
மீண்டும் தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி !
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த…