Category: முக்கிய செய்தி

  • நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

    நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

    நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

    கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

    யாழ்ப்பாணம் (Jaffna) – நயினாதீவை (Nainativu) சேர்ந்த பெண்ணொருவர் கடலில் பயணித்தவாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த சம்பவமானது, நேற்றைய தினம் (17.04.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   இதனை தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததன் காரணமாக பொதுமக்கள் பெண்ணை போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி…

  • இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

    இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

    மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பெண்ணின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!

    தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!

    ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத்துத் தெரிவிக்கையில், தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி…

  • வவுனியாவில் பேருந்து சாரதி கைது!

    வவுனியாவில் பேருந்து சாரதி கைது!

    வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில்…

  • தமிழர்கள் தேர்தலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் : கஜேந்திரன் வலியுறுத்து!

    தமிழர்கள் தேர்தலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் : கஜேந்திரன் வலியுறுத்து!

    ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajenthiran) தெரிவித்துள்ளார். ஐனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளரை நிறுத்துவது மற்றும் பகிஸ்கரிப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 75 வருடங்களாக…

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!

    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைமாத்திரைகளை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கர் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சுமார் 75 கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பக்கெற்றுக்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 35 மில்லியன் ஆகும். கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை மாத்திரைகள் வடிவில் சிறு பொதிகளாக சுற்றி விழுங்கியுள்ளார். இதனையடுத்து…

  • பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!

    பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!

    ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார்.   பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற…

  • வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டத்தில் குழப்பம்!

    வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டத்தில் குழப்பம்!

    வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் குழப்பம் காரணமாக இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று (12.04.2024) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு…

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மூன்று தமிழர்கள்!

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மூன்று தமிழர்கள்!

    வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பொருட்களுக்கு சுங்கவரி செலுத்தாமல் கொண்டு வந்தமை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.