Category: முக்கிய செய்தி

  • முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!

    முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!

    திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து மன்றின் உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.…

  • விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

    விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

    விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீடிப்பு நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள் வன்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ளதன் மூலம்…

  • யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

    யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது.   கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம்…

  • நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!

    நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!

    Jacob Arulrajah Yogendran Vaiseegamagapathy Mariajerom Mariyanayagam Jeyathasan Kurukularajah Reginald Nagarajah Shweta Uthayakumar Kalaichelvi Sivasubramaniam Joseph PAntony Cynthia Sri Pragash Shanthini Sivaraman Sudesh Suren Mahendran Wasanthaa Rohini Devi Karuppiah Gopalakrishnan Arumugam Navaneshan Murugandy Sivani Ramesh Vijitharan Varatharajah Kumuthini Kunaratnam Thaninayagam Shanmuganathan Jeyameera Karthick Ravichandran Mathy Mahalingam NONE Kandasamy Sooriyakumaran Gupenthiran Mahalingam

  • யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றி வளைப்பு!

    யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றி வளைப்பு!

    யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பிரித்தெடுக்கும் உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். அதனை அடுத்து வீட்டினுள் சென்று பொலிஸார் சோதனை…

  • முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!

    முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!

    திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான  பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பூர் பொலிசாரினால், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),…

  • தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

    அன்பார்ந்த தமிழீழ மக்களே!                              தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்தியதமிழின அழிப்புப் போரில், 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களைநினைவேந்திடும்,தமிழின அழிப்புநினைவுநாள் – மே18 இன் பதினைந்தாம்ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும்பரந்துவாழும் தமிழர்கள்உணர்வெழுச்சியோடு நினைவேந்திடதயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும்விடுதலைப்போராட்டமாக எமதுபோராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும்பல இலட்சக்கணக்கான மக்களையும்ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாகநெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்றுதேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது.   சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்பஉதவிகளை வழங்கியதன்காரணமாக, 2009…

  • யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!

    யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!

    யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.   தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகை சுடரும் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு…

  • தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு!

    தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு!

    15 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15வது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு சிறீலங்கா அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும், தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது.…

  • இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில் இளைஞன் உயிரிழப்பு!

    இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில் இளைஞன் உயிரிழப்பு!

    யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில், இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.   கோப்பாய் தெற்கை சேர்ந்த 41 வயதுடைய  செல்வநாயகம் பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி வீதியில் கடமையில் இருந்த பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை மறித்த போது, இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளார். அதனை அடுத்து, பொலிஸ் உத்தியோகஸ்தரும் இளைஞனை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, சுன்னாகம்…