Category: இலங்கை செய்திகள்
-

முருகன், பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை வருகின்றனர் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள் மூவரும் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நளினி உள்ளிட்ட ஆறுபேரும் உயர் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
-

இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல் !
மன்னாரில் (Mannar) பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (02.03.2024) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.மன்னார், பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
-

ஞானசார தேரரின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த தீர்ப்பானது இன்று (2.4.2024) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால் வழங்கப்பட்டுள்ளது.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரதிவாதி ஞானசார தேரர் தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில்…
-

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி !
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளது.அதேநேரம் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
-

கட்டுநாயக்கவில் பயங்கர விபத்து!
ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் பாரவூர்தி ஒன்று தொடருந்துடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தொடருந்து சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
-

வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம் !
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது(28.03.2024) இன்றையதினம்(01.04.2024)அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி சிறிது உயர்வடைந்துள்ளதுடன், விற்பனை பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (01.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
-

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது.ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
-

விமல் வீரவன்ச விடுதலை!
முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
-

குறைக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு!
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று(01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் முன்னிலைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-

தேவாலயத்தில் கத்தியுடன் ஒருவர் கைது!
நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது, இன்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஆராதனைக்கு வந்திருந்த ஒரு குழுவினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் தொடர்பில் கடமையிலிருந்த காவல்துறை புலனாய்வு அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த நாற்பத்து மூன்று வயதான கந்தசாமி வாகனநாயகம் என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக…