Category: இலங்கை செய்திகள்
-

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு!
மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya Aeronautics Pvt. Ltd) நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன்ஸ் மெனேஜ்மன்ட் (Airports of Regions Management Company) நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்காக, விருப்பம் தெரிவிப்பு…
-

ருமேனியாவுக்கு ஆட்கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!
போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ருமேனியாவில் இளைஞர்கள் குழுவொன்றை வேலைக்கு அனுப்ப முயற்சித்த நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக, ருமேனியாவிற்கு வேலைக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் ஆவணங்களைச் சரிபார்த்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். இதன் பின்னர், பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப்…
-

ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி, நிற பேதங்களை களைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர்கள் இவ்வாறு ஊடகங்களிடம் கூறியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-

இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு!
இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிக பெரிய எண்ணிக்கையிலான தொழில்வாண்மையாளர்களும் கல்வி கற்றவர்களும் வெளியேறியுள்ளனர்.இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் போது இலங்கையில் வெளிநாட்டு பணங்களின் புழக்கம் அதிகரிக்கும் நிலை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
-

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை – நீதிபதி இளஞ்செழியன் விசனம்!
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நல்லூர் சந்தியில் நீதிபதியின் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை இன்று (25.4.2024) யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
-

கொழும்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!
இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு பெறுமதியான இரத்தினக் கற்களை தருவதாகக்கூறி ஐம்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (25) உத்தரவிட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் மபாஸ் இட்டிகார் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து!
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் செயற்பாடுகளை உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில் பயணங்களின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிதிபலகையில் பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் உயிராபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகத்திற்கான ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளே இவ்வாறு செயற்படுகின்றனர்.சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டடுகின்றனர்.
-

வெடுக்குநாறி மலை விவகாரம்: பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்களத்திடம் விசாரணை!
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு இன்று (24.04.2024) அழைக்கப்பட்ட நெடுங்கேணிப் பொலிஸார் , வனவளத் திணைக்களத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது.
-

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்!
கிளிநொச்சி (Kilinochchi) மேல் நீதிமன்றத்தின் இரண்டாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக எ.ஜி. அலெக்ஸ்ராஜா (A.G. Alexraja) நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்றையதினம் (24.04.2024) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதேவேளை, கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.எம். சஹாப்தீன் இன்று முதல் யாழ்ப்பாணம் (Jaffna) குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.
-

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது!
அம்பாறையில் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.