இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு!

இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிக பெரிய எண்ணிக்கையிலான தொழில்வாண்மையாளர்களும் கல்வி கற்றவர்களும் வெளியேறியுள்ளனர்.இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் போது இலங்கையில் வெளிநாட்டு பணங்களின் புழக்கம் அதிகரிக்கும் நிலை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.