கொழும்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!

இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு பெறுமதியான இரத்தினக் கற்களை தருவதாகக்கூறி ஐம்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் மபாஸ் இட்டிகார் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.