இந்தாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் தற்போது வரை, புவியின் சராசரி வெப்பநிலை 1 புள்ளி 45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் மோசமான நிலையை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்துள்ள இந்நிறுவனம், வெப்பநிலை அதிகரிப்பால், பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டத்தின் அளவு உயரும் என்றும் எச்சரித்துள்ளது.
இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply