சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகிறது.
பார்வைக் குறைபாடுடையவர்களின் சுதந்திரமான நடமாட்டம், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஒக்டோபர் 15ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பார்வைக் குறைபாடுடையவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் சுயமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதற்கு வெள்ளைப் பிரம்பு முக்கிய உதவிக் கருவியாக விளங்குகிறது. அதேவேளை, அது அவர்களின் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
1964ஆம் ஆண்டு முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினமாக அங்கீகரிக்கப்பட்டது. பார்வைக் குறைபாடுடையவர்களின் திறமைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிப்பதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தடைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, வீதிகளில் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்திச் செல்லும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பாதசாரிக் கடவைகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், பொது இடங்களில் தடையற்ற அணுகலை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் சுயாதீனமான நடமாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் அவசியமாகும்.
Leave a Reply