கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை

கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.

செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.

மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *