சிறுவன் சீட்பெல்ட் அணிய மறுத்ததால் போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பிஎல்சன் விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த போர்ட்டர் ஏர்லைன்ஸ் (Porter Airlines – Flight PD444) விமானம் ரத்து செய்யப்பட்டது.

விமானம் ஓடுதளத்தை நோக்கிச் சென்றபோது, ஒரு சிறிய சிறுவன் தனது இருக்கையில் நின்றுகொண்டு சீட்பெல்ட் அணிய மறுத்துள்ளான். பெற்றோரும் விமானப் பணிப்பெண்களும் முயன்றும் சிறுவனைச் சீட்பெல்ட் அணிய வைக்க முடியவில்லை.

 பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக விமானம் மீண்டும் முனையத்திற்கு (Terminal) திருப்பப்பட்டது. சிறுவனையும் அவனது பெற்றோரையும் கீழே இறக்கி, அவர்களின் உடைமைகளை எடுத்துத் தரும் நேரத்தில் விக்டோரியா விமான நிலையத்தின் ஓடுதளம் மூடும் நேரம் (இரவு 12:30 மணி) நெருங்கிவிட்டதால், விமானப் பயணம் அன்றைய இரவுக்கு ரத்து செய்யப்பட்டது.

 சிறுவன் பயத்தினால் இருக்கையின் கீழ் ஒழிந்துகொண்டதாகப் பயணிகள் தெரிவித்தனர். எனினும், விமான நிறுவனம் பயணிகளுக்குத் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதிலும், தங்குமிடம் வழங்குவதிலும் தாமதம் செய்ததாகப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பயணிகளும் மறுநாள் மதியம் புறப்பட்ட மாற்று விமானம் மூலம் டொராண்டோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *