சீனா போன்ற போட்டி நாடுகளிடம் இருந்து தொழில்நுட்பங்கள் திருடப்படுவதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) ஆகியவற்றைக் குறிவைக்கும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து கனடா மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் கனடாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ‘நோர்டெல் Networks’ நிறுவனத்தின் வணிகத் திட்டங்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவை சீன ஹேக்கர்களால் திருடப்பட்டு, அந்நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது கனடாவில் பலமான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கட்டமைப்புகள் உள்ளதாகவும், இத்தகைய அச்சுறுத்தல்களை உளவு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கால்கரி பல்கலைக்கழகத்தில் (University of Calgary) அமைக்கப்படவுள்ள கனடாவின் 3வது பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையத்திற்கு (Defence Innovation Secure Hub) $20.3 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தபோதே அமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். இமையம் குவாண்டம் தொழில்நுட்பங்களை (Quantum Technologies) மேம்படுத்துவதற்காகச் செயல்படும்.
Leave a Reply