நடிகர் விஜய் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல் கடிதம் தமிழ்நாடு பொலிஸ் தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்குத் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழு, உடனடியாக நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரூரில் நேற்றையதினம்(27) நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply