முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.
குரவில் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த கந்தசாமி தர்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அவதானித்தவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தாரா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply