கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசம்

கண்டி, கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கம்பளை வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த கந்துரட்ட குடை உற்பத்தித் தெழிற்சாலையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று(28) மாலை குறித்த தீ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தீயை அணைக்க பல்வேறு தரப்புகளும் கடுமையாக போராடிய நிலையில் குடை உற்பத்தித்தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.