எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக அரசல்லாத தரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு வருடத்தினுள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நட்டஈட்டு தொகை திறைசேரியின் செயலாளருக்கு செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கம்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு, ஓய்வுபெற்ற நீதியரசர் காமினி அமரசேகர தலைமையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் நட்டஈடு ஆணைக்குழுவொன்றையும் ஸ்தாபிக்க உத்தரவிட்டது.
அதேநேரம் நகர அபிவிருத்தி மற்றும் கடற்பாதுகாப்பு தொடர்பான முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளமை மற்றும் அதனூடாக குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பொறுப்புகூறவேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply