பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

கன்னட மொழியில் முதன்முதலில் அறிமுகமான சரோஜா தேவி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.

தொடர்ந்து எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமானார், தொடர்ச்சியாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் பொருந்தக்கூடியவர் சரோஜா தேவி.

முக பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்திழுத்து அசாத்திய நடிப்பை வெளிப்படுத்துவார், இவரது பாடல்கள் இன்றும் கூட ரசிக்கக்கூடியவை, அவ்வளவு எளிதில் சரோஜாதேவியை யாரும் மறந்துவிட முடியாது.

ஒரு வருடத்திற்கு 30 படங்கள் என ஒருநாளைக்கு 18 மணிநேரம் கூட நடிக்கக்கூடியவர் சரோஜா தேவி.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார், கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார்.

இன்று உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார், சரோஜா தேவியின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *