முதல் போட்டியில் பங்களாதேஸை தோற்கடித்த இலங்கை அணி

சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று(10) கண்டி பல்லேகலையில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 154 ஓட்டங்களை பெற்றது.

இதில், ஹுசைன் எமொன் 38 ஓட்டங்களையும்,மொஹமட் நயிம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஸன 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இதில், குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.