அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

கனேடியர்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்து வருவதால் அமெரிக்க பொருளாதாரத்தில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

Vancity என்னும் ஆய்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவுக்கு கனேடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில், வாஷிங்டனில் கனேடியர்களால் பெறப்படும் வருவாய் 47 சதவீதமும், மொத்த அமெரிக்காவில் 33 சதவீதமும் குறைந்துள்ளது.

மேலும், அமெரிக்க இணையத்தள வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் கனேடியர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் முக்கியமாக, ஆடை வர்த்தகம் 26 சதவீதம் குறைந்துள்ளதுடன், பரபரப்பாக காணப்படும் கனடா – அமெரிக்க எல்லைகளில் தற்போது போக்குவரத்து சுமார் 40 சதவீதம் குறைந்துவிட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கனேடியர்கள், வர்த்தகம், சுற்றுலா என முக்கிய விடயங்களில் அமெரிக்காவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நிலை மீண்டும் முன்போல் மாற வெகு காலம் எடுக்கலாம் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.