மது போதையினால் பதவி இறக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!

கனடாவில் மது போதையின் காரணமாக பொலிஸ் அதிகாரி பதவி இறக்கப்பட்டுள்ளார்.கனடாவின் டர்ஹம் பகுதியின் பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு பதவி இறக்கப்பட்டுள்ளார்.குடி போதையில் வாகன விபத்தினை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி, இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி வகித்து வந்த பதவி நிலையிலிருந்து ஓராண்டு காலம் தரமிறக்கப்பட்டுள்ளார்.இந்த பொலிஸ் அதிகாரி கடந்த 17 ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அதிகாரியின் ஓட்டுனர் உரிம் ஓராண்டுக்கு இடைநிறுத்தப்படுவதுடன் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போல் ட்விடி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.