கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பலியான இந்திய தம்பதியின் அடையாளம் தெரிந்தது!

கனடாவில் பிரதான சாலை 401ல் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட இந்திய தம்பதிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தால் குறித்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இந்திய துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,

பிரதான சாலை 401ல் வாகன விபத்தில் சிக்கி பலியானவர்கள் 60 வயது மணிவண்ணன் அவரது மனைவி 55 வயது மகாலட்சுமி மற்றும் அவர்களின் பேரக்குழந்தை என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பத்தினரை மருத்துவமனையிலேயே இந்திய துணைத் தூதுவர் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.