கனடாவில் பதிவான நிலநடுக்கம் !

வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இது குறித்து யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும் இது ஒரு இயற்கையான நிகழ்வு தான் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தவிரவும் இந்த நிலநடுக்கங்கள் மிகவும் பெரிய அளவில் இல்லாமல் மிகச்சிறிய ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளன, அதாவது அந்த நிலநடுக்கங்கள் அனைத்துமே ரிக்டர் அளவில், 1க்கும் குறைவான அளவிலேயே பதிவாகியுள்ளன.

கடலுக்குக் கீழே உள்ள நிலப்பரப்பில், அதாவது கடல்படுகையில், இரண்டு புவித் தட்டுகள் மெதுவாக விலகும்போது, இரண்டு தட்டுகளுக்கும் இடையில் சுமார் 1 மீற்றர் நீளமான இடைவெளி உருவாகும்.

அந்த இடைவெளியை நிரப்புவதற்காக, பூமியின் மையப்பகுதியிலிருக்கும் எரிமலைக் குழம்பு மெதுவாக மேலே வந்து, உறைந்து அந்த இடத்தில் பாறையாக மாறி அமர்ந்துவிடுமாம்.