Tag: #canadanews

  • படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றின் உத்தரவு !

    படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றின் உத்தரவு !

    ஆறு இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம்(29) ஒட்டாவாவில் உள்ள நீதிமன்றத்தில் தொலைபேசி மூலமான காணொளி ஊடாக சந்தேகநபர் முன்னிலையான போது ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும்…

  • அதிகரிக்கப்படவுள்ள சம்பளம் !

    அதிகரிக்கப்படவுள்ள சம்பளம் !

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, குறித்த மாகாணத்தின் குறைந்த பட்ச சம்பளம் 65 சதங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தற்போது கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

  • கனடா வரும் மாணவர்களுக்கான அறிவித்தல் !

    கனடா வரும் மாணவர்களுக்கான அறிவித்தல் !

    கனடாவில் கல்வி கற்க உத்தேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை கனடாவின் ஒன்றாரியோ அறிமுகம் செய்ய உள்ளது. கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட உள்ளனர். குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.…

  • அதிகரித்து வரும் தட்டம்மை நோய்!

    அதிகரித்து வரும் தட்டம்மை நோய்!

    தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார். மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே பெற்றோர்  தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை உரிய நேரத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

  • வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

    வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

    வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கு சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளம் கனடியர்கள் தங்களது கடின உழைப்பினை வாடகைக்காக செலவிட்டு…