Tag: #breakingnews
-

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். சுற்றுலா பயணிகளிடம் அதிகளவான கட்டணங்கள் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
-

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய எதிர்வரும் நாட்களில் விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் (Sherin Balasingham ) தெரிவித்துள்ளார். நீரிழிவு நோய் (Diabetes) பாதிப்பு குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் உடல் பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய இரண்டு காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான…
-

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி (Kilinochchi) இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-

-

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக…
-

கடலில் குழந்தை பிரசவித்த பெண்!
யாழ்ப்பாணம் (Jaffna) – நயினாதீவை (Nainativu) சேர்ந்த பெண்ணொருவர் கடலில் பயணித்தவாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த சம்பவமானது, நேற்றைய தினம் (17.04.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததன் காரணமாக பொதுமக்கள் பெண்ணை போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி…
-

கனடாவை அதிர வைத்த கொள்ளை!
கனடாவின் (Canada) டொராண்டோ (Toronto) பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணய கொள்ளையுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற கொள்ளையுடன் தமிழர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் (canada) பிரம்டனை…
-

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!
கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக…
-

அமைச்சர் பாலித தெவரபெருமவின் மரணம்!
மின்சாரத் தாக்குதலின் காரணமாக உடற்பாகங்கள் அனைத்தும் முற்றாக செயலிழந்ததன் காரணமாகவே முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவின்(Palitha Thewarapperuma) பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.அத்துடன், அவரது உடல் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.