Tag: #breakingnews
-

மூடப்படும் மதுபானசாலைகள்!
பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். டொலர் கையிருப்பு அதிகரிப்பு மற்றும் ரூபாவின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ருவன்வெல (Ruwanwella) பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
-

இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை!
ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 279 பேர் விடயத்தில், “பொறுப்புப் பற்றாக்குறையை” சரிசெய்து நீதியை வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு யார் காரணம் என்பதை தீர்மானிக்க “முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை” நடத்தப்பட வேண்டும் என்று நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட தூதுவரான Marc-Andre Franche கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் வலியுறுத்தினார். குறித்த…
-

வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது!
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நுவரெலியா – டொபாஸ் பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் நுவரெலியா (Nuwara Eliya) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, 19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-

கொழும்பில் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
கொழும்பு(Colombo) குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை நேற்று(19.04.2024) ப்ளுமென்டல் பொலிஸ் பிரிவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, இவரிடமிருந்து 800 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-

வாகனங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறுதியான வாகன இறக்குமதியின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 3 வருடங்களை 7 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-

பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!
அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
-

கனடா விசிட்டர் விசா – தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில் பெருந்தொகையான இலங்கையர்கள் கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ளனர். எனினும் அண்மைக்கால தரவுகளின்படி விசிட்டர் விசாவில் செல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய இணைய வழி வீசா!
இணைய வழியான புதிய வீசா முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த இணைய வழியான புதிய வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார்.இதற்காக 25 டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இரண்டு கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20.04.2024) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இரு பெண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.