Tag: #breakingnews
-

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
கடுவலை – மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு முனையம் நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவிக்கையில், “புதிய நிரப்பு முனையம் நாளை திறக்கப்படும்.கெரவலப்பிட்டி முனையம் போதாது. நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன. டிசம்பரில் இருந்து வாரத்தில் 2 நாட்கள். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கெரவலப்பிட்டி மற்றும் மாபிம இரண்டும் செயற்பாட்டில் இருந்தன. கெரவலப்பிட்டியை நிறுத்த…
-

ஜனாதிபதித் தேர்தலால் நாடு மீண்டும் ஸ்தம்பிதம் அடையும் நிலை : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக மீளும் செயற்பாடு, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஸ்தம்பிதமடைந்துவிடக்கூடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் மீட்புப் பொதியால் தூண்டப்பட்ட கடுமையான சீர்திருத்தங்கள் காரணமாக, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. எனினும் நாடு முற்றிலும் ஆபத்தில் இருந்து வெளியேறவில்லை என்று நந்தலால் வீரசிங்க…
-

வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!
வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
-

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பரிதாப மரணம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை – மாரதென்ன (Balangoda) பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகின. இந்தநிலையில், பரீட்சை எழுதச் சென்ற குறித்த மாணவன் அப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு திரும்பிய நிலையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
-

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் நடவடிக்கை : எச்சரித்துள்ள சுகாஷ்!
கிளிநொச்சியில் (Kilinochchi) யுத்த நினைவுச்சின்னம் காணப்படும் இடத்தில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படவுள்ள விளையாட்டு பூங்காவிற்கான கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் (Sukash) தெரிவித்துள்ளார். குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர் ஊடகங்களிடம் கருத்துரைக்கையில், “இந்த இடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தினால், மக்களுடன் சேர்ந்து ஒருமித்த அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம். மேலும், பூநகரி பொன்னாவெளி பகுதியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. அது மாத்திரமன்றி,…
-

வீசா அனுமதி கட்டணத்தில் மாற்றமில்லை : அமைச்சரவை தீர்மானம்
வெளிநாட்டவர்களிடம் அறவிடப்பட்ட 30 நாட்கள் வீசா அனுமதிக்கான 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (06.05.2024) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச வீசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-

மட்டக்களப்பில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ஆசிரியர் எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரே இன்று (06) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வரவழகை்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்றுவரும் 10 வயது…
-

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!
யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார். கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று…
-

கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பலியான இந்திய தம்பதியின் அடையாளம் தெரிந்தது!
கனடாவில் பிரதான சாலை 401ல் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட இந்திய தம்பதிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தால் குறித்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இந்திய துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், பிரதான சாலை 401ல் வாகன விபத்தில் சிக்கி பலியானவர்கள் 60 வயது மணிவண்ணன் அவரது மனைவி 55 வயது மகாலட்சுமி மற்றும் அவர்களின் பேரக்குழந்தை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள…
-

இணையவழி மோசடிகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
வங்கிகள் சங்கம், லங்காபே (LankaPay) மற்றும் ‘FinCSIRT’ ஆகியன இணைந்து, இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. உலகளவில் மற்றும் , கவர்ச்சிகரமான இணைய சலுகைகளை காட்டி கையடக்கத் தொலைபேசி பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக கிளிக் செய்து, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டும் மோசடிகள் குறித்து இந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.