Category: கனடா செய்திகள்
-

கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை !
நாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும், அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் போதியளவு தெளிவு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தெற்கில் போன்றே வடக்கிற்கு சென்று மக்களை தெளிவுபடுத்துமாறு தம்மிடம்…
-

அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவில் சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் கூறப்படுகின்றது.கடந்த 2023ஆம் ஆண்டு சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களில் கடன் அட்டை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான களவுச்…
-

கனடாவில் பதிவான நிலநடுக்கம் !
வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும் இது ஒரு இயற்கையான நிகழ்வு தான் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிரவும் இந்த நிலநடுக்கங்கள் மிகவும் பெரிய அளவில் இல்லாமல் மிகச்சிறிய ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளன, அதாவது அந்த நிலநடுக்கங்கள் அனைத்துமே ரிக்டர் அளவில், 1க்கும் குறைவான அளவிலேயே பதிவாகியுள்ளன. கடலுக்குக் கீழே உள்ள நிலப்பரப்பில், அதாவது கடல்படுகையில், இரண்டு புவித் தட்டுகள் மெதுவாக…
-

கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி!
கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை. யோசனைக்கு ஆதரவாக கொன்சவடிவ் கட்சியினர் வாக்களித்த போதிலும், லிபரல், என்.டி.பி மற்றும் குபெக்கோ போன்ற கட்சிகள் எதிராக வாக்களித்திருந்தன. இந்த யோசனைக்கு ஆதரவாக கூடுதல் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால்…
-

ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு!
சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் இந்த நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களின் விற்பனை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. இவ்வாறான களவுச் சம்பவங்களினால் சில நிறுவனங்கள் 50,000 டொலர்கள் வரையில் நட்டமடைந்துள்ளன
-

கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கைது!
ஒன்றாரியோ மற்றும் மொன்றியாலில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மற்றும் மொன்றியல் காவற்துறையினர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் கூட்டு ஊடக சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில்; குறித்த கும்பல் வாகனக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள்…
-

வான்கூவர் தீவுகளில் ஒரே நாளில் 2,000 நிலநடுக்கங்கள்!
வான்கூவர் தீவுகளில் இந்த மாத துவக்கத்தில், ஒரே நாளில் 2,000 முறைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் உருவானதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அது பயத்தை ஏற்படுத்தும் செய்தி அல்ல என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
-

கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு!
கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தொழில் மற்றும் கல்வி நோக்கில் கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு துரித கதியில் நிரந்தர வதிவுரிமை கோரிக்கை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-

கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்று சிக்கலில் மாட்டிய சங்கிலி நிறுவனம்!
கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வைன் விற்பனை செய்த பிரபல நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி பல்பொருள் விற்பனை சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான லொப்லொவ் (Loblaws) நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமது நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் 16 வயது சிறுவனுக்கு வைன் விற்பனை செய்ததனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏழாயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம்…
-

அல்பேர்ட்டாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பும் நிரந்தர வதிவுரிமையும்!
மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கனடாவில் ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் சுற்றுலாத்துறை தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள், நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.…