Category: கனடா செய்திகள்
-

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு!
கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளது.Rentals.ca மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக வாடகைத் தொகை அதிகரித்துள்ளது. இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி…
-

கனடாவில் ஏப்ரல் மாதம் 90000 புதிய வேலை வாய்ப்புக்கள்!
கனடாவில் ஏப்ரல் மாதம் சுமார் 90000 புதிய வேலை வாய்ப்புக்கள் பதிவாகியுள்ளன.கடந்த ஓராண்டு காலப் பகுதியில் பதிவான அதி கூடிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை இதுவாகும்.கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் மூலம் இவ்வாறு வேலை வாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.1 வீதமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கனடாவில் இளையோர் மத்தியில் வேலைவாய்ப்பு இன்மை அதிகளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுகாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், உணவு சேவை…
-

அலைபேசிகளுக்கு இன்று கிடைக்கவுள்ள அவசர செய்தி
கனடியர்களின் அலைபேசிகளுக்கு இன்றைய தினம் அவசர எச்சரிக்கை தகவல் கிடைக்கப் பெறவுள்ளது.மத்திய அரசாங்கம் இந்த அவசர எச்சரிக்கை தகவலை அனுப்ப உள்ளது.பரீட்சார்த்த அடிப்படையில் இந்த தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடாவில் அவசர நிலைமைகளின் போது இவ்வாறு அலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்படுவது வழமையானது. இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பும் முறைமை சீரான முறையில் தொழிற்படுகின்றதா என்பதனை பரீட்சிப்பதற்காக இவ்வாறு இன்றைய தினம் பரீட்சார்த்த அடிப்படையில் எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது.
-

கோழி முட்டை மூலம் பிரபலமான பெண்!
கனடாவில் பெண் ஒருவர் தனது கோழி முட்டையின் மூலம் பிரபல்யமாகியுள்ளார்.ஒன்றாரியோ மாகாணத்தின் மாட்டாவா பகுதியில் வசித்து வரும் மெலின்டா கிரியோனின் என்ற பெண் வளர்த்த கோழிகளில் ஒன்று பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது. மெலின்டாவின் கோழிப் பண்ணையில் சுமார் 60 கோழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. வழமையான முட்டையின் அளவினை விடவும் மூன்று மடங்கு பெரிய முட்டையொன்று இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண முட்டை ஒன்றின் எடை 56 கிராம்கள் என்ற போதிலும் இந்த முட்டையின் எடை 152 கிராம்கள்…
-

கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பலியான இந்திய தம்பதியின் அடையாளம் தெரிந்தது!
கனடாவில் பிரதான சாலை 401ல் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட இந்திய தம்பதிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தால் குறித்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இந்திய துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், பிரதான சாலை 401ல் வாகன விபத்தில் சிக்கி பலியானவர்கள் 60 வயது மணிவண்ணன் அவரது மனைவி 55 வயது மகாலட்சுமி மற்றும் அவர்களின் பேரக்குழந்தை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள…
-

கனடாவிலிருந்து அதிகமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோர் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
கனேடிய குடியுரிமை பெற்றும் கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 2017ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு அமெரிக்கா, ஹொங்ஹொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளார்கள்.
-

சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
கனடாவில் (Canada) கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு (International Students) கோவிட் காலகட்டத்தில் அகற்றப்பட்ட கட்டுப்பாடு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணிபுரிய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி புரிவதற்காக மாறிவிடுகிறது என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
-

கனடாவின் எல்லைப் பாதுகாப்பில் அறிமுகமாகவுள்ள புதிய தொழில்நுட்பம்!
கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண முக அடையாளத் தொழில்நுட்பம் (facial recognition) தொலைபேசிகள் ஊடாக பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எல்லைப் பகுதிகளில் நேரத்தை சேமிக்க முடியும் என எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளின் நேரத்தை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
-

கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல்!
கனடாவில் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் பிரதான நகரங்களில் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) வாடகை குடியிருப்பாளர்களுக்கு வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளதோடு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலே வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
-

கனடாவில் மோசமடைந்து செல்லும் வருமான ஏற்றத்தாழ்வு!
கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை மோசமடைந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில் அதிகளவு வருமானம் ஈட்டுவோருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டுவோருக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இடைவெளி கடந்த ஆண்டில் அதிகளவில் உயர்வடைந்துள்ளதோடு, உயர் வட்டி வீதங்கள் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் செலவிட நேரிட்டுள்ளது.