Category: கனடா செய்திகள்

  • கனடாவில் மற்றுமொரு உணவு பொருள் தொடர்பில் எச்சரிக்கை

    கனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த உணவு பண்டத்தை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வொபல்ஸ் வகைகள் ஏற்கனவே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் 365 வோல்புட்ஸ் என்ற பண்டக்குறியை கொண்ட வொபல்ஸ் வகைகளையும் சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய…

  • கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!

    கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு…

  • கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

    கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம்…

  • கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா?

    கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா? கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

  • ஏகலைவன் சொல்வதென்ன

    மேற்காணப்படும் வாட்ஸ்ப் செய்திமூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்தியை தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை என்னைப் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. இதனால் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ,சில உண்மை சம்பவங்களை தெரியப்படுத்துவது என் தேசியக் கடமையாகும். கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழர் சங்கங்களின் கூட்டமைப்பு தான் (Federation of Tamil sangam)கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கிக் கொண்டு இருந்தது. உலக ஒழுங்குக் அமைய கனடாத்…

  • கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது!

    கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது! கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே…

  • கனடாவில் அதிகரிக்கும் உரிமை கோரப்படாத சடலங்கள்

    கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளை வழங்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுகிறது உயிரிழந்தவர்கள்…

  • கனடாவின் முக்கிய அமைச்சர் ஒருவர் ராஜினாமா

    கனடிய லிபரல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சீமோஸ் ஓரீகன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ரீகன் தொழில் அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். சமூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் தனது ராஜினாமா குறித்து அவர் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக லிபரல் கட்சியின் உறுப்பினராக ரீகன் கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக…

  • வைர மோதிரம் கொள்வனவு செய்த கனடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த…

  • கனடாவில் நபர் ஒருவரின் மோசமான செயல்

    கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.