பிரிட்டிஸ்-கொலம்பியாவில் காணாமல் போய் 1 வருடமாகியும் கிடைக்காத இளைஞன்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) விக்டோரியா நகரைச் சேர்ந்த 19 வயதான ட்ராவிஸ் பெர்ல்மேன், 2025 ஆகஸ்ட் 7 அன்று சஸ்காட்செவனின் மூஸ் ஜா (Moose Jaw) பகுதியில் கடைசியாகப் பார்க்கப்பட்டார். அவர் காணாமல் போய் தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

 இளைஞர்கள் வீட்டை விட்டுச் செல்வது இயல்பானது என்றாலும், ஒரு வருடத்திற்கும் மேலாக ட்ராவிஸ் கிடைக்காதது மிகவும்  அசாதாரணமானது என மூஸ் ஜா காவல்துறை தெரிவித்துள்ளது. இதை அவர்கள் சந்தேகத்திற்குரிய மற்றும் உயர்மட்ட வழக்க விசாரணையாகக் கருதுகின்றனர்.

 ட்ராவிஸ் மிகவும் புத்திசாலி, வேடிக்கையான மனிதர் மற்றும் பேஸ்பால் (Baseball) விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்று நினைவு கூர்ந்த அவரது தாயார் ஸ்டெபானி வெயின்ஸ்டீன், தன் மகனைக் கண்டுபிடிக்கத் தெரிந்த தகவல்களைக் கூறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்ராவிஸ் 5 அடி 8 அங்குல உயரமும், பழுப்பு நிற முடியும், நீல நிறக் கண்களும் கொண்டவர். இடது கையில் சிலந்தி (spider) பச்சை குத்தப்பட்டுள்ளது. கடைசியாகப் பார்க்கப்பட்டபோது அவர் பச்சை நிற முத்திரை கொண்ட அடர் சாம்பல் நிற நைக் (Nike) ஸ்வெட்டர் மற்றும் டிம்பர்லேண்ட் பூட்ஸ் அணிந்திருந்தார்.

B.C., சஸ்காட்செவன் அல்லது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இதுகுறித்த தகவல்கள் தெரிந்திருக்கலாம் எனக் நம்பும் மூஸ் ஜா காவல்துறை, தகவல்களை (306) 694-7600 என்ற எண்ணிற்கோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *