
கனடா, மார்க்கம் நகரில் எதிர்வரும் செப்டம்பர் 19–20இ 2026 தேதிகளில் ‘2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு’ (Bill Hogarth Secondary School, Markham)) மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
தொல்காப்பியம் வெறும் இலக்கண நூலன்று, அது பழந்தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் உளவியல் சான்று, தமிழனின் சிந்தனைப் பெருவெளியின் ஆதி அடையாளம். இத்தகைய மாபெரும் மாநாட்டினை நாம் வெற்றியடையச் செய்வதன் மூலம், நமது மூத்த தமிழின் வேர்களை உலகெங்கும் ஆழமாகப் பரப்ப முடியும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உலகெங்கிலும் இருந்து தலைசிறந்த தமிழ் அறிஞர்களும், பேராசிரியர்களும் வருகை தரவுள்ளனர். அறிஞர்களை அன்போடு வரவேற்றுப்போற்ற வேண்டியது நமது பெருமைமிகு கடமையாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply