விண்டோபெக்கில் பயங்கர சூறாவளி – இரு பகுதிகளில் கடும் சேதம்!

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. போர்ட்டேஜ் லா பிரேரிக்கு கிழக்கே உள்ள பெனார்ட் பகுதியில் முதல் சூறாவளி தாக்கியது.

மணிக்கு 165 கி.மீ வேகத்தில் வீசிய காற்றினால் பல கட்டடங்களும் தானியக் கிடங்குகளும் சேதமடைந்தன.

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முதல் சூறாவளி தாக்கிய சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் விண்டோபெக்கின் ரிவர் ஹைட்ஸ் பகுதியில் இரண்டாவது சூறாவளி தாக்கியது. இங்கு காற்றின் வேகம் மணிக்கு 155 கி.மீ வரை பதிவாகியுள்ளது.

இந்த கடும் காற்றினால் மேனிடோபா ஹைட்ரோ மின் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்தனர்.

இதில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரமின்றி தவித்து வருகின்றன.

ட்ரோன்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்தச் சூறாவளிகளின் பாதிப்பை என்.ரீ.பீ அமைப்பினர் மதிப்பீடு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *