ஈழமுரசின் இன்றைய தின ராசி பலன்கள் தை – 13 ஞாயிற்றுக்கிழமை 26 ஜனவரி 2025

மேஷம் ராசி :
வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்காலம் பற்றி புதிய பாதைகள் புலப்படும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம் ராசி :
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கல்வியில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

மிதுனம் ராசி :
தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

கடகம் ராசி :
சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல், வாங்கலில் லாபங்கள் மேம்படும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். பரிசு கிடைக்கும் நாள்.

சிம்மம் ராசி :
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். உதவி நிறைந்த நாள்.

கன்னி ராசி :
வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

துலாம் ராசி :
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.

விருச்சிகம் ராசி :
குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.

தனுசு ராசி :
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

மகரம் ராசி :
மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய இடத்தில் தங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரியாத சில கேள்விகளுக்கு தெளிவுகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

கும்பம் ராசி :
கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மனதில் எண்ணியிருந்த காரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.

மீனம் ராசி :
நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். ஆதாயம் நிறைந்த நாள் இன்று