இந்தியாவிற்கு விஜயம் செய்த ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தோரில் சத்திய சாய் வித்தியா விஹார் உயர் கல்வி நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவர் இவ்வாறு இந்தியா சென்றுள்ளார்.

இந்த விஜயத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது துணைவியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் இணைந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட சொற்பொழிவொன்றை ஆற்ற உள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.