அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சுமந்திரன் தொடர்பான முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாமல் போனது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே, அவர் தேர்தலில் தோல்வியுற்றது அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகின்றது.

சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடியிருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்துருக்காது.

இவ்வளவு காலமும் அரசாங்கத்துக்கு சார்பாக சுமந்திரன் செயற்பட்டதாலேயே அவரை வடக்கு மாகாண மக்கள் நிராகரித்த போதும் தென்னிலங்கை மக்கள் ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது